Search This Blog

Wednesday 27 July 2011

கீரை கட்லெட் yarlosai


தேவையான பொருட்கள்
பசலைக்கீரை(ஏதேனும் ஒரு கீரை) – 1  கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார்தூள் – 1  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 /4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 /2 தேக்கரண்டி
கடலை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 5  மேசைக்கரண்டி

செய்முறை
1.கீரையைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3.கடாயில் 2  தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
4.பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சாம்பார்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
5.இதனுடன் கீரை சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை அணைத்து விடவும்.
6.சூடு ஆறியதும் இதனுடன் சிறிது சிறிதாக கடலை மாவு சேர்த்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
7.உருண்டையில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
8.ஒவ்வொரு உருண்டையையும் லேசாகத் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
9.ஒரு அகலான கடாயை சிறிது எண்ணெய் தடவி சூடு செய்யவும். கட்லெட்டை வரிசையாக அடுக்கி அதைச் சுற்றிலும் 2  தேக்கரண்டி எண்ணெய் விடவும்.
10.மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.சில நிமிடங்களுக்குப் பிறகு கட்லெட்டை திருப்பி விடவும்.இதே போல் கட்லெட் மொறு மொறுப்பாகவும், பொன்னிறமாகவும் வரும் வரை திருப்பி போட்டுக் கொண்டேஇருக்கவும்.
12.சுவையான சத்தான கீரை கட்லெட்  தயார்

No comments:

Post a Comment