இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 474 ரன்களும் (டிக்ளேர்), இந்தியா 286 ரன்களும் எடுத்தன. பின்னர் 188 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்து `டிக்ளேர்' செய்தது.
458 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி இன்று கடைசி மற்றும் 5-வது நாள் ஆட்டத்தின் போது 261 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி 196 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரெய்னா (78), லட்சுமணன் (56), டிராவிட் (36), காம்பீர் (22), டோனி (16) ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்களும், பிராட் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
No comments:
Post a Comment