தேவையானவை:
முட்டை-4,
பெரிய வெங்காயம்-2,
எண்ணெய்-4 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு,
கறிவேப்பிலை-சிறிதளவு,
மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்.
அரைக்க:
காய்ந்த மிளகாய்-6-8,
பூண்டு-4
.செய்முறை:
காய்ந்த மிளகாயை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவையுங்கள்.அத்துடன் பூண்டு சேர்த்து அரைக்கவும்.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து அடித்துக்கொள்ளுங்கள்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து,அடித்த முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுள் வைத்து வேகவிடுங்கள்.நன்கு வெந்தவுடன் வெளியே எடுத்து,ஆறியதும் துண்டாக நறுக்குங்கள்.
ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து,அரைத்த விழுதைச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.பச்சை வாசனை போனதும் வெங்காயம்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி,அதனுடன் நறுக்கிய முட்டை துண்டுகள்,கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி இறக்குங்கள்.சுடசுட சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment